Wednesday, January 18, 2012

அனுருத்தின் மேல் ஏன் இந்தக் கொலை வெறி?


கொஞ்ச நேரத்துக்கு முதல் தோழர் அமல்ராஜ் இன் "கொலைவெறியும் அரிவாளோடு அலைபவர்களும்" என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை வாசித்தேன்..
அப்போது எனக்கும் மனதுள் உருத்திக் கொண்டு இருந்த ஒரு விடயத்தை நம் வலைப்பதிவு நண்பர்களிடம் பகிர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது..

வை திஸ் கொலைவெறி பாடல் உருவாக்கி கொஞ்ச நாட்களுக்குள் பட்டி தொட்டி மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் வெற்றி நடை போடுகேன்றது..
பெரும்பாலோனவர்களின்  செல்போன் ரிங்கிங் டோன்னாக இப் பாடலே ஒலிக்கின்றது . இப்படி பிரபல்யமாக இருக்கும் இப் பாடலுக்கு இந்த வெற்றியைக் கொடுத்தது தனுஷின் பாடல் வரிகளா? அல்லது தனுஷின் குரலா அல்லது அனிருத்தின் இசையமைப்பா?
இது என் மனதுள் எழும் கேள்வி..

என்னைப் பொறுத்தளவில் கொலைவெறி பாடல் சூபர் டூபர் ஹிட் ஆவதற்கு
அந்த இசையமைப்பே காரணம்.
தவில்,நாதஸ்வர இசைப்பிரயோகம் அருமையா..இது இப்டி இருக்க  தனுஷின் கொலைவெறி பாடல் என்று மட்டும் பேசப்படுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.

உண்மையிலேயே தனுஷின் பாடல் வரிகளுக்கும்,குரலுக்கும் பெரிய பங்குண்டு..யாரும் அதை மறுக்க வில்லை..ஆனால் பேஸ் மட்டம் ஸ்டாங்கா இருந்தா தானே பில்டிங் ஸ்டாரங்கா இருக்கும்?

அனிருத் ஒரு வளர்ந்து  வரும் கலைஞன். கன்னி முயர்சியே இவ்ளோ ஹிட் ஆகி  இருக்கு..இப்பிடியான கலைஞர்களை ஊக்குவிச்சாதானே புது விஷயங்கள் கிடைக்கும்..
இதுவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைச்சு பாட்டு ஹிட் ஆகி இருந்தா கதையே வேற...பெரிய விழாவே  எடுத்திருப்பாங்க.

புது வருஷதுல இருந்து பொங்கல் வரை  டீ.வீ ல போடுற சிறப்பு நிகழ்ச்சிகள்ல கொலைவெறி பற்றி  நிகழ்ச்சி இல்லாம இல்லை..
இந்த நிகழ்சிகள்ள எல்லாம் தனுஷ் தான் முன்னிலைப்படுத்தப்பட்டாரூ..தனுஷுக்கு குடுத்த அதே மரியாதை , பாராட்டு அனிருத்துக்கு குடுக்கப் படல...

உண்மையிலேயே கொலை வெறி பாடலின் இசையை ரசிசிருந்த எந்த எதிர்ப்பும் வந்திருக்காது...
கலைஞர்கள்   மதிக்கப் பட வேண்டும்... இது தான் என்ட கருத்து..

அனிருத் என்ன நினைகிறாரோ எனக்கு தெரியாதுப்பா..எனக்கு பிடிக்கல..சினிமா உலகம் இப்டி தான் எனக்கு தெரியுது..ஆனாலும் மாறனும்..ஐஸ்வர்யா 3 படத்த இயக்குறதாலயும், தனுஷ்,ஸ்ருதி ஹாசன் நடிகிறதாலயும் அங்க அவங்கட பெயர் மட்டுமே பேசப்படுது...ரஜனி ,கமல்ஹாசன் ட வாரிசுகள் என்ட காரணத்தால இவங்கட பெயர்கள் பேசப்படுது...விழா எடுக்கப்படுது..

அனிருத்திர்கு  இந்த அறிமுகம் ஒரு பக்கத்தில நன்மைய இருந்தாலும் இன்னொரு பக்கத்தில எங்கயோ இடிக்குது...
சரி..எங்கிருந்தாலும் வாழ்க..இப்படியான புது இசைகள்,பாடல்கள் வந்தா எங்களப் போன்ற ரசிகர்களுக்கு சந்தோசம் தான்...

நண்பர்களே...இந்த ஆக்கம் நான் முதலே எழுதி வெளியிட்டிருந்தேன்..என்ட  கவனக் குறைவால அது அழிஞ்சு போச்சு...அதான் திரும்ப எழுதினன். 
முதல் வாசித்தவர்களுக்கு மட்டுமே இந்த அறிவுறுத்தல்..அதுவும் வாசிச்ச பிறகு தான் சொல்லுவம்.எப்புடீ???  :P









EAR4N னும் அதன் சங்கடங்களும்

காதில் ear 4n  ஐப் போட்டுக்கொண்டு வீதி , பஸ் என்று எங்கு பா;த்தாலும் வலம் வரும் நண்பா;களே உங்களோடு என் மனதில் எழும் கருத்துக்களைப் பகிரலாம் என நினைக்கின்றேன்.
தொலைபேசி அழைப்புக்களை இலகுவாக மேற்கொள்ளவே இந்த ear 4n அதாவது hand free தேவைப்படுகின்றது. அதாவது பஸ்ஸில் நின்று கொண்டு அல்லது வாகனம் செலுத்திக் கொண்டு இருக்கையில் தொலைபேசி அழைப்பு வந்தால் 4n ஐ கைகளில் ஏந்தியவாறு பேசுவது கடினமாக இருக்கும்.அது ஆபத்தும் கூடியது.
இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. சிலா; 4n பேசிக் கொண்டே வேறு ஏதும் வேலைகளை செய்வதற்காக 4n ஐ காதில் வைத்துக் கொண்டு தமது தோள்ப்பட்டைகளைப் பயன் படுத்தி விழாமல் ஏந்திக் கொள்வாh;கள்.

இச் செயற்பாடு முதுகு வலி ,கழுத்து வலி ,காது வலி ,தோற்பட்டை வலி போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.
இக் காலத்தில் சிறுவா;களிலிருந்து பொpயவா; வரை அனைத்து வேலைகளையும் 4n ன் ஊடாகவேயே நடத்தி முடிக்கின்றனா;.
தமது செயற்பாடுகளை இலகுவாக்கவும் , நேரத்தை மிச்சப்படுத்தவும்  எல்லோரும் மிக துhpதமாக செயற்பட்டு வருகின்றனா;.
இவை இவ்வாறிருக்க இந்த  ear 4n ஐ பயன்படுத்துபவா;களின் எண்ணிக்கையும் அதிகாpத்த வண்ணமே உள்ளது எனலாம்.

மற்றவருக்கு கரைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் , தமது உடல் நலத்தை கருத்திற் கொண்டுமே பெரும்பாலானோ
; இக் கருவியைப் பயன்படுத்துகிறாh;கள்.
நல்ல எண்ணம் தானே? அதைப்பற்றி கதைக்க என்ன இருக்கின்றது என நீங்கள் கேட்கலாம்.
நான் பஸ்ஸில் பயணம் செய்யும் போது அவதானித்த விடயங்களைக் கொண்டே இவ்வாறு எழுத முனைகின்றேன்.

ஆம் , அன்றொரு நாள் ஒரு இளைஞன் பஸ்ஸில் ஏறினாhன். சாpயான சனம். “கண்டக்டா; hpக்கட் எடுக்காதவங்க hpக்கட் எடுங்க” என்று கத்திக் கொண்டே இருந்தாh;. அந்த குறிப்பிட்ட இளைஞன்  ஏதோ ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பிட்டு hpக்கட் கேட்டு விட்டு யன்னல் வழியே வெளியே பாh;த்துக் கொண்டு நின்றான்.
கண்டக்டருக்கு அவன் கூறியது விளங்கவில்லை. அவரும் “தம்பி எந்த இடம்?தம்பி எந்த இடம் என்று சொன்னீh;கள்?” என்று வினவிக் கேட்டுக் கொண்டே இருந்தாh;. அந்த இளைஞனோ திரும்பிப் பாh;த்து பதில் சொல்வது போல இல்லை. பின் கண்டக்டா; அவரை சுரண்டி “எங்கே போக டிக்கட் எடுத்தீங்க?” என்று கேட்கவும் அவ் இளைஞன் புhpயாதது போல பாவனை செய்து கொண்டு காதிலிருந்த ear4n ஐ கழட்டி “என்ன கேட்டீங்க ?” என்று கேட்டான்.
அந்த கண்டக்டருக்கு மட்டுமன்றி அங்கிருந்த அனைத்து பயணிகளுக்கும் அது முகம் சுளிக்கத் தக்க நிகழ்வாகவே காணப்பட்டது.
அவ் வாலிபனை எல்லோரும் முதலில் காது கேட்கும் ஆற்றல் இழந்தவா; என்றே நினைத்தனா;.
அதே போல் இன்னொரு நாள் வேறொரு வாலிபன் பாட்டுக் கேட்ட வண்ணமே பஸ்ஸில் பயணம் செய்து தான் இறங்க வேண்டிய இடத்தை மறந்து கண்டக்டா; “தம்பி நீங்க எங்க இறங்க hpக்கட் எடுத்தீங்க” என்று 3,4 தடவை கத்திக் கேட்டு , அவரை தொட்டு அசைத்து “எங்கே இறங்க hpக்கட் எடுத்தீங்க என்று கேட்டேன்”என்றாh;.
அப்போது தான் அவ் இளைஞன் சுயநினைவு வந்தவனாக குறிப்பிட்ட ஒரு இடத்தை கூற அது கடந்து விட்டதே என்று கண்டக்டா; கூறினாh;.
அவ் இளைஞனுக்கு சங்கடமாகி விடவே அடுத்த தாpப்பிலேயே இறங்கி விட்டான்.

சிலா; ear4n ஐ பயன்படுத்தி கொண்டு பொpய சத்தமாக கதைப்பாh;கள்.

இவற்றை விட இன்னொரு கொடுமையும் இந்த ear 4n அணிந்து வீதியில் செல்பவா;களால் நிகழ்த்தப்படும். ம்ம்ம்……இவா;கள் வீதியில் தாம் நடந்து செல்வதை மறந்து “கிளப்பில்”; இருப்பது போன்று வீதியிலேயே நடனமாடிய வண்ணம் செல்கின்றனா;.

இன்னொரு வேடிக்கை பஸ்ஸில் பாட்டு கேட்ட வண்ணம் பயணிப்பவா;கள் மெய்மறந்து திடீரென பொpய சத்தமாக தாம் இரசித்த கேட்கும் பாடலை பாடியும் விடுகின்றனா;.
பஸ்ஸில் உள்ள அனைவரும் இவ்வாறானவா;களை வித்தியாசமானவா;களாகவே பாh;க்கின்றனா;.

ear4n னுடன் பயணிக்கும் இளைஞா;களே இவ்வாறான சங்கடங்களுக்கு உள்ளாகின்றனா;.
ஏந்த விடயத்திலுமே நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.


இவ்வாறு மெல்லிசைப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணம் செய்யும் போது பயணத்தின் களைப்பு தொpவதில்லை என்பது உண்மை.
அதிலும் சிலருக்கு பஸ் பயணத்தின் போது துhக்கம் வரும் அல்லது பக்கத்தில் யாரும் அரட்டை அடித்துக் கொண்டு இருக்க வேண்டும் அப்போது தான் பயணக் களைப்பு தொpயாமல் துhங்காமல் செல்ல முடியும் என்கிறாh;கள்.
அதற்கு கண்டவா;களுடனும் கதைத்து கொண்டிருப்பதை விடுத்து ear4n இல் பாட்டு கேட்டுக் கொண்டு சென்றால் இவ்வாறான பிரச்சனைகளை தீh;த்துக் கொள்ளலாம்.
சிலா; ear4n ல் பாடல் மட்டுமன்றி உடயளள ல் நடைபெற்ற விhpவுரைகளை 4n இல் பதிவு செய்து வைத்து அவற்றை கேட்ட வண்ணமே இருக்கின்றனா;. இதனால் படித்த பாடங்கள் மனதில் பதிகின்றது.
அத்தோடு இந்த ear4n ஐ மதிப்பீட்டளவில் காதலா;களே அதிகமாக பயன்படுத்துகின்றனா;.
எனது நண்பா;களில் பலா; தமது காதலன் ழச காதலியோடு சத்தமில்லாமல் , இரகசியமாக , தெளிவாக கதைக்கவும் பயன்படுத்துகின்றாh;கள்.
அத்தோடு அதிக நேரம் அவா;கள் 4n ஐ காதில் வைத்து உபயோகிப்பதால் 4n சூடாகின்றது. அதுமட்டுமன்றி  4n இலிருந்து வரும் கதிh; வீச்சுகள் மூளையை தாக்குகின்றன. இவ் அபாய நிலையை குறைக்க ear 4n ஐ உபயோகிப்பது சிறந்தது என ஆய்வாளா;கள் தொpவித்திருந்தனா;.

இவ்வாறு தொpவித்திருந்தாலும் நான் படித்த ஒரு பத்திhpகையில் ear 4n பாவிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும்; கூறியிருந்தனா;.
ஏனெனில் செவிப்பறைக்கு அண்மியதாக அவை காணப்படுவதால் காதுகளுக்கும் , மூளைக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று குறிப்பிட்டிருந்தனா;.

ஆகவே இளைஞா;களே ear4n பயன்படுத்துவதை தவறு என கூற வரவில்லை. சந்தா;ப்பத்திற்கு ஏற்றாற் போல நடந்து கொள்ளுங்கள். உங்கள் சுயமாpயாதையை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். எம்முடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் எமக்கும் மற்றவா;களுக்கு பாதிப்பில்லாதவாறு காணப்பட வேண்டும் என்பதனையும் கருத்திற் கொள்ளுங்கள்.

Sunday, November 20, 2011

சாதியைப் பற்றி கதைக்கும் நீங்கள் சாதித்தது என்ன ?

சாதி வெறி கொண்டவர்களை என்ன செய்வது ? எப்போது இவர்கள் திருந்தப்போகிறார்கள் ?  

இந்த 21 ம் நூற்றாண்டிலே இப்படியும் மனிதர்கள் ? இந்த நவீன காலத்திலேயே எல்லாம் இயந்திர மயமாகி விட்டது. இந்தகாலத்தில் சாதி பார்ப்பவர்களே நீங்கள் வாஷிங் மெசினை எந்த சாதிக்குள் வகுக்கப் போறீர்கள்? தொழில் புரியும் அடிப்படையிலேயே சாதியை நீங்கள் வகுகிறீர்கள் அப்டித்தானே? இந்தக்காலத்தில் எனக்கு தமது சாதி அடிப்படையிலேயே தொழில் புரியும் இளைநர்களைக் காட்ட முடியுமா? அதுபோக பெரும்பான்மையினர்
( சிங்களவர் ) எம்மை மதிக்கவில்லை என்று போர் கோடி தூக்குகிறீர்கள்.......

நீங்களே முதல் உங்கள் இனத்தை மதிக்கவில்லை பிறகு எப்படி அவர்களிடமிருந்து எதிர் பார்ப்பது ? முதலில் மனிதரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.அவர்கள் திறமை,குணம்,சாதுர்யத்தை மதிப்பிடுங்கள்.

உங்கள் ஒவ்வொருவரின் சாதி பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? எதில் பொறிக்கப் பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா? பிறப்பு சான்றிதழ் ? இறப்பு சான்றிதழ்? சரி, சாதி பற்றி அதிகம் பேசப்படுவது திருமண சந்தையில் தான். அந்த திருமண சான்றிதழில்? காண முடியுமா ? எவ்வாறு உங்களுக்கு குறிப்பிட்ட சாதி வகுப்பினர் நான் எனத் தெரிகிறது? வாய் மொழி மூலமே தவிர எந்த எழுத்து ஆவணமும் இல்லை.அப்படித்தானே? உங்களுக்கு தெரியுமா ?எழுத்து மூலம் எது கூறப்பட்டுள்ளதோ அதுதான் உறுதியான ஆதாரம்.
சாதி பற்றி பேசி திரிவதை விடுத்து சாதிக்க துணியுங்கள். கடவுளால்பிரிக்கப்பட்டது இரு சாதி.ஒன்று ஆண் சாதி மற்றையது பெண் சாதி . நீங்களே ஒன்றை உருவாக்கி அதை நியாயபடுத்த முனையாதீர்கள். குறைந்த சாதி உள்ள ஒருவன் எதையும் சாதித்து விட்டால் அவனை வீள்துவதட்காக உயர் சாதியில் இருபவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் இந்த சாதி. தம்மால் முடிய வில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒருவனை அவன் சாதியை குறிப்பிட்டு வீழ்த்த யோசிக்கிறார்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று அக் காலத்திலேயே பாரதியார் கூறி விட்டார்.ஆனால் இன்னும் இந்த நவீன யுகத்திலும் சாதி பட்டி பேசிக்கொண்டு இருக்கிறீர்களே உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராக தெரியலையா?

நான் பார்த்த ஒரு விடயம் ஒரு தாய் தனது 32 வயது மகளுக்கு வரன் தேடுகிறார்.சாதி சரி வராததால் அவள் முதிர்கன்னியாகிக் கொண்டு போகிறாள்.அது தாய்க்கு தெரிய வில்லை.அவள் கண்ணை சாதி மறைக்கிறது.

நல்ல தொழில் ,குணம் ,குடும்பம் எல்லாம் அமைந்தாலும் பார்க்கும் மாபிள்ளையின் தகப்பனின் சாதியை மட்டுமன்றி அவன் தாயின் சாதியையும் பார்கிறார் குறிப்பிட்ட பெண்ணின் தாயார்.இதில் கொடுமையான விடயம் இதோடு சாதி பார்ப்பதை நிறுத்தி விடாமல் அந்த மாபிள்ளையின் உறவினர்கள் எந்த சாதியில் மணம் முடித்துள்ளார்கள் என்றெல்லாம் அத் தாயார் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு பார்ப்பதால் அவரின் மகளின் வாழ்வு கேள்வி குறியாக காணப் படுகிறது. அந்த பெண்ணின் திருமண கனவை சாதி சதி செய்து விட்டது என்றே கூற வேண்டும்.

எத்தையோ பேர் கூறியும் திருந்தாதவர்கள் நான் கூறியா திருந்த போகிறார்கள் ? புரிந்து கொள்ள போகிறார்கள் ? இருக்கட்டும்.இது என் கருத்து அதை பகிர வேண்டியது என் கடமை.  

என்னவளைக் கண்டாயோ?


அந்தி சாயும் முன்னர்
அடி வானில் ஒளி வீசி
அர்ச்சனை புரியும்
ஆனந்த வெண்மதியே
கை தவறிப் போன
என்னவளைக் கண்டாயோ?

பென்னம் பேருண் தோப்பில்
பூத்திருக்கும் புது மலராய்
ஆகாயப் பரப் பதிலே
கண் சிமிட்டும் தாரகையே
கை தவறிப் போன
என் காதலியைக் கண்டாயோ?

அந்திச் சிவப்புக்குள்
அஸ்தமித்துப் போய்
குட திசையைக் குடைந்து வரும்
காலைக் கதிரவனே
கை தவறிப் போன
என் நெஞ்சில் நிறைந்தவளைக் கண்டாயோ?

தெம்மாங்குச் சோலையிலே
தென்னை இளங் கயிற்றைத்
தொட்டுத் தடவி வரும்
இனிமைப் பூங்காற்றே
கை தவறிப் போன
என் மடக் கொடியைக் கண்டாயோ

தென்றல் சுழன்று வரும்
அந்திப் பொழுதினிலே
தேடலில் தவழ்ந்து வரும்
வான முதல்த் தேனருவியே
தொலைந்து போன
என் வஞ்சியவளை கண்டாயோ

பருவ கால மறிந்து
பாரில்லுள்லோர் வியந்து நிரட்க
பருவ மலை கொண்டு வரும்
கார்கால கரு முகிலே
கை நழுவிப் போன
என் நங்கையவளைக் கண்டாயோ?