சாதி வெறி கொண்டவர்களை என்ன செய்வது ? எப்போது இவர்கள் திருந்தப்போகிறார்கள் ?
இந்த 21 ம் நூற்றாண்டிலே இப்படியும் மனிதர்கள் ? இந்த நவீன காலத்திலேயே எல்லாம் இயந்திர மயமாகி விட்டது. இந்தகாலத்தில் சாதி பார்ப்பவர்களே நீங்கள் வாஷிங் மெசினை எந்த சாதிக்குள் வகுக்கப் போறீர்கள்? தொழில் புரியும் அடிப்படையிலேயே சாதியை நீங்கள் வகுகிறீர்கள் அப்டித்தானே? இந்தக்காலத்தில் எனக்கு தமது சாதி அடிப்படையிலேயே தொழில் புரியும் இளைநர்களைக் காட்ட முடியுமா? அதுபோக பெரும்பான்மையினர்
( சிங்களவர் ) எம்மை மதிக்கவில்லை என்று போர் கோடி தூக்குகிறீர்கள்.......
( சிங்களவர் ) எம்மை மதிக்கவில்லை என்று போர் கோடி தூக்குகிறீர்கள்.......

நீங்களே முதல் உங்கள் இனத்தை மதிக்கவில்லை பிறகு எப்படி அவர்களிடமிருந்து எதிர் பார்ப்பது ? முதலில் மனிதரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.அவர்கள் திறமை,குணம்,சாதுர்யத்தை மதிப்பிடுங்கள்.
உங்கள் ஒவ்வொருவரின் சாதி பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? எதில் பொறிக்கப் பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா? பிறப்பு சான்றிதழ் ? இறப்பு சான்றிதழ்? சரி, சாதி பற்றி அதிகம் பேசப்படுவது திருமண சந்தையில் தான். அந்த திருமண சான்றிதழில்? காண முடியுமா ? எவ்வாறு உங்களுக்கு குறிப்பிட்ட சாதி வகுப்பினர் நான் எனத் தெரிகிறது? வாய் மொழி மூலமே தவிர எந்த எழுத்து ஆவணமும் இல்லை.அப்படித்தானே? உங்களுக்கு தெரியுமா ?எழுத்து மூலம் எது கூறப்பட்டுள்ளதோ அதுதான் உறுதியான ஆதாரம்.

சாதி பற்றி பேசி திரிவதை விடுத்து சாதிக்க துணியுங்கள். கடவுளால்பிரிக்கப்பட்டது இரு சாதி.ஒன்று ஆண் சாதி மற்றையது பெண் சாதி . நீங்களே ஒன்றை உருவாக்கி அதை நியாயபடுத்த முனையாதீர்கள். குறைந்த சாதி உள்ள ஒருவன் எதையும் சாதித்து விட்டால் அவனை வீள்துவதட்காக உயர் சாதியில் இருபவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் இந்த சாதி. தம்மால் முடிய வில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒருவனை அவன் சாதியை குறிப்பிட்டு வீழ்த்த யோசிக்கிறார்கள்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று அக் காலத்திலேயே பாரதியார் கூறி விட்டார்.ஆனால் இன்னும் இந்த நவீன யுகத்திலும் சாதி பட்டி பேசிக்கொண்டு இருக்கிறீர்களே உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராக தெரியலையா?
நான் பார்த்த ஒரு விடயம் ஒரு தாய் தனது 32 வயது மகளுக்கு வரன் தேடுகிறார்.சாதி சரி வராததால் அவள் முதிர்கன்னியாகிக் கொண்டு போகிறாள்.அது தாய்க்கு தெரிய வில்லை.அவள் கண்ணை சாதி மறைக்கிறது.
நான் பார்த்த ஒரு விடயம் ஒரு தாய் தனது 32 வயது மகளுக்கு வரன் தேடுகிறார்.சாதி சரி வராததால் அவள் முதிர்கன்னியாகிக் கொண்டு போகிறாள்.அது தாய்க்கு தெரிய வில்லை.அவள் கண்ணை சாதி மறைக்கிறது.
நல்ல தொழில் ,குணம் ,குடும்பம் எல்லாம் அமைந்தாலும் பார்க்கும் மாபிள்ளையின் தகப்பனின் சாதியை மட்டுமன்றி அவன் தாயின் சாதியையும் பார்கிறார் குறிப்பிட்ட பெண்ணின் தாயார்.இதில் கொடுமையான விடயம் இதோடு சாதி பார்ப்பதை நிறுத்தி விடாமல் அந்த மாபிள்ளையின் உறவினர்கள் எந்த சாதியில் மணம் முடித்துள்ளார்கள் என்றெல்லாம் அத் தாயார் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு பார்ப்பதால் அவரின் மகளின் வாழ்வு கேள்வி குறியாக காணப் படுகிறது. அந்த பெண்ணின் திருமண கனவை சாதி சதி செய்து விட்டது என்றே கூற வேண்டும்.