அந்தி சாயும் முன்னர்
அடி வானில் ஒளி வீசி
அர்ச்சனை புரியும்
ஆனந்த வெண்மதியே
கை தவறிப் போன
என்னவளைக் கண்டாயோ?
பென்னம் பேருண் தோப்பில்
பூத்திருக்கும் புது மலராய்
ஆகாயப் பரப் பதிலே
கண் சிமிட்டும் தாரகையே
கை தவறிப் போன
என் காதலியைக் கண்டாயோ?
அந்திச் சிவப்புக்குள்
அஸ்தமித்துப் போய்
குட திசையைக் குடைந்து வரும்
காலைக் கதிரவனே
கை தவறிப் போன
என் நெஞ்சில் நிறைந்தவளைக் கண்டாயோ?
தெம்மாங்குச் சோலையிலே
தென்னை இளங் கயிற்றைத்
தொட்டுத் தடவி வரும்
இனிமைப் பூங்காற்றே
கை தவறிப் போன
என் மடக் கொடியைக் கண்டாயோ
தென்றல் சுழன்று வரும்
அந்திப் பொழுதினிலே
தேடலில் தவழ்ந்து வரும்
வான முதல்த் தேனருவியே
தொலைந்து போன
என் வஞ்சியவளை கண்டாயோ
பருவ கால மறிந்து
பாரில்லுள்லோர் வியந்து நிரட்க
பருவ மலை கொண்டு வரும்
கார்கால கரு முகிலே
கை நழுவிப் போன
என் நங்கையவளைக் கண்டாயோ?
அடி வானில் ஒளி வீசி
அர்ச்சனை புரியும்
ஆனந்த வெண்மதியே
கை தவறிப் போன
என்னவளைக் கண்டாயோ?
பென்னம் பேருண் தோப்பில்
பூத்திருக்கும் புது மலராய்
ஆகாயப் பரப் பதிலே
கண் சிமிட்டும் தாரகையே
கை தவறிப் போன
என் காதலியைக் கண்டாயோ?
அந்திச் சிவப்புக்குள்
அஸ்தமித்துப் போய்
குட திசையைக் குடைந்து வரும்
காலைக் கதிரவனே
கை தவறிப் போன
என் நெஞ்சில் நிறைந்தவளைக் கண்டாயோ?
தெம்மாங்குச் சோலையிலே
தென்னை இளங் கயிற்றைத்
தொட்டுத் தடவி வரும்
இனிமைப் பூங்காற்றே
கை தவறிப் போன
என் மடக் கொடியைக் கண்டாயோ
தென்றல் சுழன்று வரும்
அந்திப் பொழுதினிலே
தேடலில் தவழ்ந்து வரும்
வான முதல்த் தேனருவியே
தொலைந்து போன
என் வஞ்சியவளை கண்டாயோ
பருவ கால மறிந்து
பாரில்லுள்லோர் வியந்து நிரட்க
பருவ மலை கொண்டு வரும்
கார்கால கரு முகிலே
கை நழுவிப் போன
என் நங்கையவளைக் கண்டாயோ?

2 comments:
வாழ்த்துக்கள்! அழகா எழுதுறிங்க! தொடர்ந்து எழுதுங்கள்! :-))
நன்றி பாலு அண்ணா
Post a Comment