Wednesday, January 18, 2012

அனுருத்தின் மேல் ஏன் இந்தக் கொலை வெறி?


கொஞ்ச நேரத்துக்கு முதல் தோழர் அமல்ராஜ் இன் "கொலைவெறியும் அரிவாளோடு அலைபவர்களும்" என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை வாசித்தேன்..
அப்போது எனக்கும் மனதுள் உருத்திக் கொண்டு இருந்த ஒரு விடயத்தை நம் வலைப்பதிவு நண்பர்களிடம் பகிர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது..

வை திஸ் கொலைவெறி பாடல் உருவாக்கி கொஞ்ச நாட்களுக்குள் பட்டி தொட்டி மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் வெற்றி நடை போடுகேன்றது..
பெரும்பாலோனவர்களின்  செல்போன் ரிங்கிங் டோன்னாக இப் பாடலே ஒலிக்கின்றது . இப்படி பிரபல்யமாக இருக்கும் இப் பாடலுக்கு இந்த வெற்றியைக் கொடுத்தது தனுஷின் பாடல் வரிகளா? அல்லது தனுஷின் குரலா அல்லது அனிருத்தின் இசையமைப்பா?
இது என் மனதுள் எழும் கேள்வி..

என்னைப் பொறுத்தளவில் கொலைவெறி பாடல் சூபர் டூபர் ஹிட் ஆவதற்கு
அந்த இசையமைப்பே காரணம்.
தவில்,நாதஸ்வர இசைப்பிரயோகம் அருமையா..இது இப்டி இருக்க  தனுஷின் கொலைவெறி பாடல் என்று மட்டும் பேசப்படுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.

உண்மையிலேயே தனுஷின் பாடல் வரிகளுக்கும்,குரலுக்கும் பெரிய பங்குண்டு..யாரும் அதை மறுக்க வில்லை..ஆனால் பேஸ் மட்டம் ஸ்டாங்கா இருந்தா தானே பில்டிங் ஸ்டாரங்கா இருக்கும்?

அனிருத் ஒரு வளர்ந்து  வரும் கலைஞன். கன்னி முயர்சியே இவ்ளோ ஹிட் ஆகி  இருக்கு..இப்பிடியான கலைஞர்களை ஊக்குவிச்சாதானே புது விஷயங்கள் கிடைக்கும்..
இதுவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைச்சு பாட்டு ஹிட் ஆகி இருந்தா கதையே வேற...பெரிய விழாவே  எடுத்திருப்பாங்க.

புது வருஷதுல இருந்து பொங்கல் வரை  டீ.வீ ல போடுற சிறப்பு நிகழ்ச்சிகள்ல கொலைவெறி பற்றி  நிகழ்ச்சி இல்லாம இல்லை..
இந்த நிகழ்சிகள்ள எல்லாம் தனுஷ் தான் முன்னிலைப்படுத்தப்பட்டாரூ..தனுஷுக்கு குடுத்த அதே மரியாதை , பாராட்டு அனிருத்துக்கு குடுக்கப் படல...

உண்மையிலேயே கொலை வெறி பாடலின் இசையை ரசிசிருந்த எந்த எதிர்ப்பும் வந்திருக்காது...
கலைஞர்கள்   மதிக்கப் பட வேண்டும்... இது தான் என்ட கருத்து..

அனிருத் என்ன நினைகிறாரோ எனக்கு தெரியாதுப்பா..எனக்கு பிடிக்கல..சினிமா உலகம் இப்டி தான் எனக்கு தெரியுது..ஆனாலும் மாறனும்..ஐஸ்வர்யா 3 படத்த இயக்குறதாலயும், தனுஷ்,ஸ்ருதி ஹாசன் நடிகிறதாலயும் அங்க அவங்கட பெயர் மட்டுமே பேசப்படுது...ரஜனி ,கமல்ஹாசன் ட வாரிசுகள் என்ட காரணத்தால இவங்கட பெயர்கள் பேசப்படுது...விழா எடுக்கப்படுது..

அனிருத்திர்கு  இந்த அறிமுகம் ஒரு பக்கத்தில நன்மைய இருந்தாலும் இன்னொரு பக்கத்தில எங்கயோ இடிக்குது...
சரி..எங்கிருந்தாலும் வாழ்க..இப்படியான புது இசைகள்,பாடல்கள் வந்தா எங்களப் போன்ற ரசிகர்களுக்கு சந்தோசம் தான்...

நண்பர்களே...இந்த ஆக்கம் நான் முதலே எழுதி வெளியிட்டிருந்தேன்..என்ட  கவனக் குறைவால அது அழிஞ்சு போச்சு...அதான் திரும்ப எழுதினன். 
முதல் வாசித்தவர்களுக்கு மட்டுமே இந்த அறிவுறுத்தல்..அதுவும் வாசிச்ச பிறகு தான் சொல்லுவம்.எப்புடீ???  :P









2 comments:

தீபிகா(Theepika) said...

உண்மையிலேயே இந்த பாடலை ரஜினியின் மருமகன் எழுதாமல் ஒரு சாதாரண கவிஞன் எழுதியிருந்தால் நிச்சயம் இசையமைப்பாளரே பிரபல்யமாகி இருப்பார். அதே நேரம் இந்த பாடலை எழுதிய கவிஞன் தமிழை கொலை செய்ததாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பான்.அந்த கவிஞனுக்கு பிரதமருடன் விருந்தும் கிடைத்திருக்காது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. அது தான் உண்மை. ஆனால் இந்தப் பாடலின் இசையில் வரும் நாதஸ்வர கோர்வை அருமை. வளர்கிற கலைஞனாய் உண்மையில் பாராட்டுக்குரியவன் இசையமைப்பாளனே. ஆனால் அது நடக்கவில்லை.

தளவாடி said...

சரியா சொன்னீங்க தீபிகா ... உங்கள் கருத்துக்கு நன்றி